facebook

தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடரின் புதிய அணித்தலைவராக ஹாசிம் அம்லா

தென்ஆபிரிக்க டெஸ்ட் தொடரின் தலைவராக விளங்கிய கிரேம் ஸ்மித் கடந்த மார்ச் மாதத்துடன் ஓய்வு பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்து இப்பதவிக்கு ஹாசிம் அம்லா நேற்று (03) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆபிரிக்க டெஸ்ட் அணிக்கு ஹாசிம் அம்லா தலைவராகவும், ஒரு நாள் போட்டிக்கு உப தலைவராகவும் செயற்படவுள்ளார்.அதேவேளை எ.பி.டி.இ வில்லியர்ஸ் ஒரு நாள்ப் போட்டி அணிக்கு தலைவராகவும், டெஸ்ட் அணிக்கு உப தலைவராகவும் செயற்படவுள்ளார்.

"தென் ஆபிரிக்க அணி இழந்த முதலிடத்தை மீண்டும் பெறுவதே தனது மிகப் பெரிய இலக்கு" என தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்த ஜக்ஸ் கலிஸ் மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட்ப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments