facebook

ஒரு நாள் போட்டிச்சுற்றில் வெற்றிக்கிண்ணம் இலங்கை அணிக்கு

லண்டனில் நேற்று (03) இடம்பெற்ற 05 ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியினை இலங்கை 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்துள்ளது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 06.30 க்கு ஆரம்பமான இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் அலெஸ்ரெயர் குக் 54 ஓட்டங்களை பெற்றார்.பதிலுக்கு 220 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இலங்கையணியானது சிறப்பாக விளையாடி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் 06 விக்கெட்டுக்களால் இலங்கையணி தொடரை கைப்பற்றியுள்ளது.

லகிரு திரமன்னே 60 ஓட்டங்களையும் மஹேல 53 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். தொடரின் ஆட்ட நாயகனாக லகிரு திரமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments