facebook

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாடு – ஐ.தே.க

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டம் தொடர்பில் நேரடியாகவே கேள்வி எழுப்பி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் ஒரு தரப்பினர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென கோருவதுடன், மற்றுமொரு தரப்பினர் பகுதியளவில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டுமென கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக இந்த அரசாங்கம் எவ்வாறான விடயங்களை செய்தது என்பதனை விடவும், அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் இந்த அரசாங்கத்தை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments