facebook

மனித உரிமை விவகாரங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாக அமையாது : அஜித் நிவாட் கப்ரால்

மனித உரிமை விவகாரங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையாக அமையாது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.ஒரு சில தரப்பினர் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போதிலும் அதற்கான விளக்கங்கள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத் தரப்பினால் வழங்கப்படும் பதில்களையும் விளக்கங்களையும் அவர்கள் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments