facebook

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் - ரணில்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான திர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்றைய தினம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமையும் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மொத்த தேசிய உற்பத்தியின் ஆறு வீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கல்விக்காக ஆறு வீத நிதி ஒதுக்கீடு, ஆய்வுக்கொடுப்பனவுகளை அதிகரித்தல், சம்பள உயர்வு, பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் தேவையின்றி தலையீடு செய்வதனை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க ஒன்றியம் முன்வைத்துள்ளது.

2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் அரசாங்கம், பல்கலைக்கழக விரிவுரையர்களுக்கு வழங்கிய வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரியளவு தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அரசாங்கம் உரிய மதிப்பினை அளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments