facebook

வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் : வானிலை அவதான நிலைய

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று (05) காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் குறிப்பாக காலி , மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அதிகளவிலான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

வட மேல் மாகாணத்தில் பலத்த மழையானது நீடிக்கும் எனவும், இம் மழைவீழ்ச்சியின் அளவானது 75 மி.மீற்றருக்கு  பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாலை வேளையிலும் இரவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் மற்றும் மத்திய பிரதேசத்தில் மழையுடன் பலத்த காற்று வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதனால் அவற்றினால் ஏற்படும் சேதங்களை தவிர்ப்பதற்காக பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வானிலை அவதானிப்பு நிலையம் வேண்டுகிறது.

Post a Comment

0 Comments