facebook

ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக தம்பர அமில தேரர்

கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் அமைப்பின் இணை ஏற்பாட்டாளரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான தம்பர அமில தேரரை நிறுத்தும் தயார்ப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜே.வி.பியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் சிலர் அண்மையில் இது குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு கட்சி சார்பற்ற வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜே.வி.பி தெரிவித்து வருகிறது.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான பிமல் ரத்நாயக்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

Post a Comment

0 Comments