facebook

கோத்தபாய அரசியலுக்கு வந்தால் வடக்கு காஸாவாக மாறும் : தயான் ஜெயதிலக

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வந்தால், வடக்கு மாகாணம் காஸாவுக்கு ஒப்பானதாக மாறிவிடும் என்று முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு, அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டால்,, அவருக்கு பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்று வழங்கப்படும்.மேலும் அவர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவதால், அவரை எதிர்த்து எந்த அமைச்சர்களும் கதைக்க மாட்டார்கள்.
  
தற்போது இருப்பதை விட மிகவும் மோசமான அமைச்சரவை ஒன்று உருவாகும். தென்னிலங்கை வெலிவேரியவை போலவும், வடக்கும், கிழக்கும் காஸாவை போன்றும் நடத்தப்படும். மனித உரிமைகளுக்கு மதிப்பே இல்லாமல் போகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments