facebook

காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை

காவல்துறை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்தறை மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அரசியல்வாதிகளின் அடியாட்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.அண்மையில் பிரதி அமைச்சரின் ஆதாரவாளர்கள் காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளின் அடியாட்களிடமிருந்து காவல்துறை உத்தியோகத்தர்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அச்சம் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக காவல்துறையினர் அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீரழிந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மெய்யான முகம் வெளிபட்டு வருவதாக கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments