facebook

நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதனால் தான் சர்வதேச அழுத்தங்கள் எதிர்நோக்கப்படுகின்றன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதனால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதனால் சர்வதேச சமூகம் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் ஏனைய உரிமைப் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமான முறையில் இயங்குவதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் அனுமதியளித்திருந்தால், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு சர்வதேச சமூகம் கோரியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்வோரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துரோகிககளாக அடையாளப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா சென்று ஆட்சியாளர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பிரேமதாச ஆட்சிக் காலத்தில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமான இயங்கிய காரணத்தினால் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலம், சர்வதேச சுயாதீன விசாரணகைளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments