facebook

பெற்றோருக்கு இடையில் மோதல் : கொழும்பு அசோகா வித்தியாலயத்தில் பதற்றம்

கொழும்பு மருதானை அசோகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையில் இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்ற இந்த மோதலில் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசோகா வித்தியாலய அதிபராக வை. யசரத்ன என்பவர் மீண்டும் நியமிக்கப்பட்டதை கண்டித்து எதிர்ப்பில் ஈடுபட்ட பெற்றோருக்கும், அதிபருக்கு ஆதரவான தரப்பினருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments