facebook

ஐ.நா பாதுகாப்புப் பேரவையின் நிரந்தரமற்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ள உதவுமாறு குவைட் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் நிந்தரமற்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களுக்கு ஆதரளிவளிக்குமாறு குவைட் அரசாங்கம், இலங்கையிடம் கோரியுள்ளது. உத்தியோகபூர்வமான முறையில் இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குவைட்டின் பிரதி சபாநாயகர் முபாரக் அல் குஹாரின்ஜி (
Mubarak Al-Khurainij), அமைச்சர் ரிசாட் பதியூதீனை சந்தித்த போது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். 2018-2019ம் ஆண்டு காலப்பகுதிக்காக உறுப்புரிமைக்காக இவ்வாறு குவைட் போட்டியிட உள்ளது. அரேபிய மற்றும் சமூகத்தின் பிரதிநிதிகளாக குரல் கொடுக்க உத்தேசித்துள்ளதாக குவைட் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments