facebook

இன்று அதிகாலை இரண்டு அனர்த்தங்களால் எட்டுப் பேர் பலி.

இலங்கையில், இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு அனர்த்தங்களில் 8 பேர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர். அகவலத்தை கிதுல்பட பாலிந்தநுவர பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற மண் சரிவில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரதேசத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதேச செயலாளர் யூ.டி.சீ. ஜயலால் தெரிவித்துள்ளார்.
  
அதேவேளை, பொலன்னறுவை - அரலஹங்வில பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிகாலை 3.00 மணியளவில் மஹியங்கனையில் இருந்து திவுலாகல நோக்கி பயணித்த லொறி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 10 வயது சிறுமி, 50 வயது பெண்மணி மற்றும் 65 வயதான முதியவர் ஒருவருமே பலியாகியுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments