facebook

பொலனறுவையில் கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

பொலனறுவையில் ஹிங்குராக்கொட, கிரிமெட்டிய கல்அமுன பிரதேசத்தில் நபரொருவர் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தின் அரிசி ஆலையில் கடமையாற்றி வந்தவரே இவ்வாறு இன்று கொல்லப்பட்டுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த குறித்த நபர் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 31 வயதான களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிங்குரக்கொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments