facebook

வெள்ள அனர்த்த மீட்புப் பணிகளில் முப்படையினர்

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெருமளவில் பாதிப்புக்குள்ளான களுத்துறை மாவட்டத்தின் பெலவத்தை, மதுகம, பாலிந்த நுவர, அகலவத்தை, வெலிபென்ன மற்றும் பபரெல்ல ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் முப்படையினர் ஈடுப்படுத்ப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இதற்கா 500க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளடங்கிய இராணுவத்தின் 2 குழுக்களும், படகுகளுடன் கடற்படையின் 10 மீட்புக் குழுக்களும், விமானப் படையின் பெல் 412 மற்றும் பெல் 212 ரகங்களைச் சேர்ந்த 2 ஹெலிகொப்டர்களும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அந்தக் குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்ட செயலாளர், சம்பந்நப்பட்ட பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் பொலிஸ் திணைக்களம் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க அவர்களுடன் ஒத்தழைக்கும் வகையிலேயே முப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளப் பெருக்கு காரணமாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ள மக்களை மீட்டெடுத்தல், தடைப்பட்டுள்ள வீதிகளை போக்குவரத்து வசதிகளுக்காக மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருதல் நடவடிக்கைகளில் முப்படையினர் பொலிஸாருடன் இணைந்த மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சீரற்ற கால நிலை தொடர்கின்ற நிலையில் மேலதிகமாக தேவைப்படும் சகல செயற்பாடகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற கால நிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கிய சுமார் முப்பது பேர் இது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments