facebook

இரத்த தானம் செய்வோரின் தினம் இலங்கையில் அனுஷ்டிப்பு

எதிர்வரும் ஜுன் 14ஆம் திகதி உலக இரத்த தானம் செய்வோரின் தினம் இரத்த தானம் தினமாகும். இலங்கையில் சுயமாகவே இரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இம்முறை உலக இரத்த தானம் செய்வோர் தினத்தை இலங்கையில் அனுஷ்டிப்பதென உலக சுகாதார ஸ்தாபம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசேட வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜுன் 14ஆம் திகதி நடைபெறும் .உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளும் இந்த நிகழ்வில், தொடர்ச்சியாக இரத்த தானம் செய்த சுமார் ஆயிரம் பேர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் அதிக எண்ணிக்கையானோர் இரத்த தானம் செய்வதை முன்னிட்டு இதனை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியும் நோக்கில் தேசிய இரத்த தான சேவைக்கொடியில் நாடுமுழுவதிலும் 50,000 பேரின் கையொப்பத்தை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் வெற்றி பெற ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தை பெறும் நோக்கில், தேசிய இரத்த தான சேவைக்கொடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக கையொப்பமிடும் நிகழ்வு நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம் பெற்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, பிரதி அமைச்சர்களான நந்தமித்ர ஏக்கநாயக்க, லலித் திஸாநாயக்க, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஆனந்த குணசேகர ,இரத்த தான சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் திஸாநாயக்க, இரத்த தான சங்கத்தின் செயலாளர் காமினி ஜயவீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments