facebook

நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடனே மணப்பெண் மாயம்

கன்னியாகுமரியில் திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வயநாடு பகுதியைச் சேந்தவர் பீட்டர், வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
அதே பகுதியில் வசித்துவந்த பிலோமினா, வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
பிலோமினா பாதிரியார் வேலை பார்க்கும் தேவாலயத்துக்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார்.
அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் பிலோமினாவின் நடவடிக்கையை கண்ட அவரது பெற்றோர், காதலிக்கும் விவகாரத்தை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, பிலோமினாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
கேரளாவின் நித்திரவிளையை சேர்ந்த ஓட்டல் மேலாளராக பணிபுரியும் ஒருவரை பிலோமினாவிற்கு திருமணம் செய்து வைப்பது என்று முடிவெடுத்தனர்.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிச்சியதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை பிலோமினாவின் காதலன் பாதிரியார் பீட்டர்தான் நடத்திவைத்துள்ளார்.
இந்நிலையில் மார்த்தாண்டம் சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்ற பிலோமினா மாலை வீடுதிரும்பவில்லை.
பின்னர், பீட்டர் தனது செல்போனில் இருந்து பிலோமினாவின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு உங்கள் மகளும், நானும் சேர்ந்து வாழ முடிவுசெய்துள்ளோம், இதனால், ஊரைவிட்டு செல்கிறோம். எங்களை தேடவேண்டாம் என்று கூறிவிடடு இணைப்பு துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியைடந்த பிலோமினாவின் பெற்றோர் அவரை தொடர்பு கொள்ள பெரும் முயற்சி எடுத்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத்தொடர்ந்து பிலோமினாவின் தாயார் களியாக்கவிளை பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments