facebook

வவுனியா பாரதிபுரம் மக்களுக்கு அச்சுறுத்தல் : பின்னணியில் ரிசாத் பதியுதீன்

வவுனியா பாரதிபுரத்தில் உள்ள தமிழ் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு பாகிஸ்தானைச் சேர்ந்த ஐந்து பேர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச வாசிகளின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் குழு ஒன்றே இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று தொழிற்சாலை அமைக்கவிருப்பதாகவும், உடனடியாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
அவர்களுடன் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் சிலரும் வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments