facebook

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (04) இடம்பெறவுள்ளது. 

இன்று மாலை 4 மணியளவில் கட்சி தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். 

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டதன் காரணமாக கடந்த மாதம் செயற்குழு கூட்டம் இடம்பெறவில்லை. 

இதன்படி இன்று செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதோடு, இங்கு ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. 

இதேவேளை தற்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. 

Post a Comment

0 Comments