facebook

தங்காலையில் ஒருவர் சுட்டுக் கொலை

தங்காலை பஸ் தரிப்பிடத்தில் தற்காலிக வாகன உதவியாளராக பணியாற்றி வந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்த வாகன உதவியாளர் தங்காலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பிரபாத் சந்தன என்ற நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தங்காலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்காலை பிரதேசம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த கிராம் அமைந்துள்ள பிரதேசம் என்பதுடன் அவரது கார்ல்டன் இல்லமும் தங்காலையிலேயே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments