facebook

அதிகாரப்பகிர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது : அனுரகுமார திஸாநாயக்க

அதிகாரப்பகிர்வின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும்.
இந்தியா இலங்கையின் பொருளாதாரத்தில் பெரிய பகுதியை விழுங்கிக் கொண்டுள்ளது. இந்த விழுங்கிய பகுதியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்கின்றது.
போர் இடம்பெற்ற காலத்தில் போருக்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்தது. இன்று அதிகாரப் பகிர்வின் மூலம் நாட்டின் அரசியலில் தலையீடு செய்ய முயற்சி;க்கின்றது.
அதிகாரப் பகிர்வின் மூலம் சாதாரண பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது.
தமிழ் இனவாத அரசியல்வாதிகள் தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்ள அதிகாரப் பகிர்வு குறித்து கோரி வருகின்றனர்.
நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதனால் இந்திய வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகளை அந்நாட்டு அரசியல்வாதிகள் வகுப்பதில்லை. அதற்காக பயிற்றப்பட்ட வேறும் அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
தமிழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கிற்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்.
13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் வட மாகாணசபை பலவீனமான ஒன்றாக அமையும். அதற்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்படும். அதனையே இந்தியா விரும்புகின்றது.
இந்தியாவின் தேவைக்கு அமைய இலங்கையின் அரசியல் காரணிகளை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments