facebook

ஜனநாயகத்தின் மைய நீரோட்டத்தில் சீனா இணையவேண்டும்: தலாய் லாமா

சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடந்த படுகொலையின் 25-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கருத்து தெரிவித்த திபெத்திய தலைவர் தலாய் லாமா, உலக ஜனநாயகத்தின் மைய நீரோட்டத்தில் சீனா இணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-
தியானன்மென் சதுக்கத்தில் 1989ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி நடந்த மோசமான சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை நமது சீன சகோதர சகோதரிகள் இன்று அனுசரிக்கின்றன. இந்த வேளையில் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக உயிர்நீத்த அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
உலக ஜனநாயகத்தின் மைய நீரோட்டத்தில் இணைவதற்கு சீனாவை ஊக்குவிக்க இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். உலகின் பிற நாடுகளின் மரியாதை மற்றும் நம்பிக்கையை சீனா பெறுவதற்கு இது உதவும்.
இவ்வாறு தலாய் லாமா கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments