facebook

சிரியாவின் ஜனாதிபதியாக பஷார் அல் அசாத் தெரிவு

சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பஷார் அல் அசாத் மூன்றாவது முறையாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 88.7 வீத வாக்குகளை பஷார் அல் அசாத் பெற்றுள்ளதாக அந்த நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டிருந்ததுடன்,,  கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் வாக்களிப்பு இடம்பெறவில்லை.
சிரியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடரும் உள்நாட்டு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெற்றிருந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களான ஹசன் அல் நூரி 4.3 வீத வாக்குகளையும் மஹெர் ஹஜ்யார் 3 .2 வீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஷாத்தின் குடும்பத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் முதல் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments