facebook

வவுனியாவில் அடிகாயங்களுடன் சடலம் மீட்பு

வவுனியா மாவட்டத்தில் அரசங்குளம் பகுதியில் புகையிரத பாதையோரமாக ஆண் ஒருவரின் சடலம் அடிபட்டகாயங்களுடன் இன்று காலை (03.06) மீட்கப்பட்டுள்ளது. இதுவரையில் அடையாளம் காணப்படாத சடலமானது சுமார் 60 வயது மதிக்கதக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்த நிலையில் இவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தலைப்பகுதியில் அடிபட்டகாயங்களுடன் உடல் பகுதியில் அங்கங்கே சிறு காயங்களுடன் காணப்படுகிறது. புகையிரதத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளி விளுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பகிறது.
  
இன்று அதிகாலை குறித்த பிரதேசத்தின் பிரதேசவாசி மாடு மேய்பதர்க்காக சென்றிருந்தவேளை அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து யாழ்பாணம் நோக்கி சென்ற புகயிரதத்தில் பயணித்த பயணியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பகிறது மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிசார் நடாத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments