facebook

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் ஓட்டமெடுத்த மணப்பெண்

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் கணவனோடு வாழ முடியாது என்று கூறிய புது மணப்பெண்ணுக்கு சமூக நல அமைப்பு ஒன்று பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பெண் லாதா. இவரை பாட்னாவுக்கு அருகிலுள்ள பிகா பலோத் என்ற கிராமத்தைச் சேர்ந்த கவுபீர் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணம் முடிந்தபின் மணப்பெண் லாதா கணவருடன் புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள வீட்டில் கழிப்பறை வசதி இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த லாதா, கழிப்பறை வசதி இல்லாத இங்கு என்னால் வசிக்க முடியாது, கழிப்பறை கட்டினால் மட்டுமே என்னை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு தனது தாய் வீட்டிற்கே சென்றுள்ளார்.
பின்னர், இதனையறிந்த சுலப் இன்டர்நேஷனல் என்ற சமூக நல அமைப்பு, லாதாவின் கணவர் வீட்டில் கழிப்பறை கட்டிக்கொடுத்ததோடு அப்பெண்ணுக்குப் பாராட்டு விழா ஒன்றையும் நடத்தி கௌரவபடுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments