facebook

இன்று சர்வதேச சுற்றாடல் தினம்

இன்று சர்வதேச சுற்றாடல் தினமாகும். இன்று (05) இத்தினத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வதேச சுற்றாடல் தினத்தை விமரிசையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (05) கொழும்பு ரோயல் கல்லூரி புதிய கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வில் பல அதிதிகளும் 500 மாணவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.மேலும் இன்று(05) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரையான காலப்பகுதி சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இலங்கையின் காடுகள் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தை பேணும் நோக்கில் வன பாதுகாப்புக்குழு நியமித்தல் - களுத்தறை மாவட்ட தொம்பகஹகந்த பாதுகாக்கப்பட்ட வனத்தின் பாதுகாப்பு - மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்வுகளை முன்னெடுத்தல் - சுற்றாடல் பாதுகாப்பு பாதயாத்திரை உட்பட மக்களை தெளிவுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் நாளை (06) வன பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன.

பதுளை மாவட்ட பாடசாலைகளில் துரு ஜன மாணவர் வங்கித் திட்டம் - தேசிய கிளைகள் ஆரம்பித்தல் - அநுராதபுர - மதவச்சிய ஆகிய பிரதேசங்களில் தேக்கு வனங்களை உருவாக்கும் திட்டம் - அரச மரக்கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான இடங்களில் நாட்டுக்கே உரித்தான மரங்களை நடல் போன்ற திட்டங்களை எதிர்வரும் 9 ஆம் திகதியில் அரசாங்க மரக்கூட்டுத்தாபனம் முன்னெடுக்கவுள்ளது.

Post a Comment

0 Comments