facebook

பூமியை விட பிரம்மாண்டமான கோள் கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் புதிய கோள் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியை விட 17 மடங்கு எடையுள்ளதும், இரண்டு மடங்கு பெரியதுமான கெப்ளர்-10 சி என்ற புதிய கோள், அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் பவுதிக மையத்தை சேர்ந்த சேவியர் னடஸ்கியூ என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 6 டிரில்லியன் மையிலில் உள்ள இந்த புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும்.
இந்த கோள் 45 நாட்களுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சேவியர் னடஸ்கியூ கூறுகையில், இந்தக் கோளை நாங்கள் கண்டுபிடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இந்த கோளில் வாழ்வதற்குறிய சாதகமான அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ளதாக, இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு விஞ்ஞானியான டிமிட்டர் சாஸ்செலோவ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments