facebook

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஜனாதிபதியால் விடுவிப்பு

தலைமன்னார் கடற்பரப்பில், கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் உத்தரவிட்ட நிலையில், அவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.
  
அத்துடன், மேற்படி மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் கடற்படை மூலமாக பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.07 படகுகளில் வந்த மேற்படி 29 மீனவர்களையும் சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் கைதுசெய்தனர். படகுகளுடன் மேற்படி மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதன் பின்னர், மேற்படி 29 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களின் படகுகளில் காணப்பட்ட வலைகளையும் நேற்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
இதனிடையே, விளக்கமறியலில வைக்க உத்தரவிட்ட மீனவர்களை அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments