facebook

இலங்கை அகதிகளுக்கான விசேட வீடமைப்பு திட்டம்- இந்திய அரசு ஆரம்பம்

தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கான விசேட வீடமைப்பு திட்டத்தை இந்திய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் 191 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு - தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அகதிமுகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்காக இந்த வீடமைப்பு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 

வனியார் அகதி முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகளுக்காக 41 வீடுகளும் தமிழ்நாடு அகதி முகாமைச் சேர்ந்த அகதிகளுக்காக 150 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments