facebook

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து : 7பேர் பலி

சீனாவில் நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் 7 பேர் பரிதாபமாய் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு சீனாவின் வான்ஷெங் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று  28 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாய் விஷவாயு கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில், உள்ளே சிக்கிகொண்ட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர், 5 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். மேலும் 16 பேரின் கதி என்ன? என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

Post a Comment

0 Comments