facebook

அமேரிக்க விமான விபதது! 7 போ் பலி

அமெரிக்காவிலுள்ள மசாச்சுசெட்ஸ் அருகே உள்ள ஹான்ஸ்காம் விமானப்படை தளத்திலிருந்து டேக் ஆப் செய்த விமானம் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்தனர். 

இது குறித்து விமான போக்குவரத்து நிர்வாகம் கூறுகையில், விமானம் தீப்பற்றி எரிந்த போது தீ கொழுந்து விட்டு எரிந்ததுடன், புகைமூட்டமும் காணப்பட்டதாக கூறியுள்ளது. 

பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக ஹான்ஸ்காம் விமான தளத்தின் இயக்குனரான ஷாரோன் வில்லியம்ஸ் உறுதிப்படுத்தினார். எனினும் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். 

தனியார் நிறுவனத்தை சேர்ந்த இந்த விமானம் நியூ ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. 

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு துறையை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது விமான தளத்தின் இயக்கம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments