facebook

பாடசாலை வான் மீது இராணுவ ட்ரக் மோதியதில் 5 பேர் காயம்

கொழும்பு ஹைலேவல் வீதியின் தெல்கந்த பிரதேசத்தில் இராணுவ ட்ரக் வண்டி, பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வானில் மோதியதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 4 மாணவர்களும் ஒரு ஆசிரியையும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறிச் சென்றுள்ளனர். இராணுவ ட்ரக் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments