facebook

மன்னார் கடற்பிரதேசத்தில் 33 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பிரதேசத்தில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்களின் 7 விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கடற்படையினர் அறிவித்தனர்.
 
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் இரண்டரை ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த 14 மீனவர்களை விடுதலை செய்தார்.
 
அவர்கள்  இன்னும் தாயகம் திரும்பாத நிலையில், மேலும் 33 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments