facebook

மாளிகாவத்தையில் தவறாக கத்னா செய்ததால் 3மாத குழந்தை பரிதாப மரணம்

சுன்னத்து (கத்னா) செய்கையில் ஏற்பட்ட தவறினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தை ஒன்று அதனால் பரிதாபமாக உயிரிழந்தது.
கொழும்பு மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த மொகமட் ஹம்தான் என்ற சிசுவே அரைகுறை சுன்னத்துச் செய்த நிலையில் மோசமாகப் பாதிக்கப்பட்டு, கொழும்பு லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மருந்து விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான மொஹமட் நியாஸ் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுன்னத்துச் செய்யும் மருத்துவராகச் செயற்பட்ட இவரின் கவனயீனத்தினாலேயே சிசு பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

Post a Comment

1 Comments

  1. கத்னா செய்வதற்கு ஆரம்பிக்கும் போது மயக்கம் அடைந்த குழந்தை ஐந்து நாட்களின் பின்பு பொரளை சிறுவர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளது. கைது செய்யப்பட மாளிகாவத்தை வைத்தியரின் தகமைகளை பரிசீலித்த Magistrate’s Court (10/06/2014) நீதிமன்றம் அவரை பதிவு செய்யப்பட்ட தகுதியுள்ள வைத்தியர் என்பதை ஏற்றுக்கொண்டு அவரை பிணையிலும் விடுவித்து விட்டது.

    கேள்விப்பட்டதை எல்லாம் உண்மை போல எழுதுவதற்குதான் கதாசிரியர்கள் இருக்கின்றார்களே. ஊடகவியலாளர்களுக்கு ஏன் இந்த வேலை

    ReplyDelete