facebook

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா நேற்று நள்ளிரவு முதல் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தமது பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து தெலங்கானா வாழ் மக்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டங்களை அடுத்து இந்த புதிய மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.
2013730144815798734_20
ஹைதராபாத்தை தலைநகராக கொண்டுள்ள தெலங்கானா மாநிலத்தில் 10 மாவட்டங்களில் 35 மில்லியன் மக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்தஇ 14 ஆண்டுகளாக பேராடிவந்த ராஷ்டிர சமிதி கட்சி தெலங்கானாவின்  முதலாவது மாநில அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
Telanagan_Generic_630_1
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேஷ மாநிலத்தில் இருந்து பிரியும் தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று பதவியேற்கவுள்ளார்..
இதேவேளை, மற்றைய மாநிலமான சீமாந்திராவின் புதிய முதல்வராக எதிர்வரும் 8 ஆம் திகதி தெலங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயு பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய மாநில உருவாக்கம் தமது வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் என தெலங்கான மாநில மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
3007telangana3
ஆந்திர பிரதேஷ மாநில ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களையும் மீறி தனி மாநில உருவாக்கத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் மக்களவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதனை அடுத்து ஆந்திர பிரதேஷ மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து கிரன் குமார் ரெட்டி பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments