facebook

சீரற்ற காலநிலையினால் பலியானோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் சீரற்ற காலநிலை மாற்றத்தினால் பெய்த கனமழை காரணமாக வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 6 மாவட்டங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் மூவர் பலியாகியுள்ளதோடு, காலி, மாத்தளை மற்றும் குருநாகலில் தலா ஒரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மலையகத்தில் தொடா்ந்தும் இடியுடன் கூடிய கனமழை பெய்வதுடன், சீரற்ற காலநிலையே நிலவுகின்றது.
இதனால் ஹட்டன் குடாகம மற்றும் கொட்டகலை கொமா்ஷல் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
2ம் இணைப்பு
சீரற்ற காலநிலை தாக்கத்தினால் இதுவரையில் 27 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்
இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்தநிலையில் அனர்த்த நிலையின் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 8 பேர் காயமடைந்துள்ளனர்.
களனி கங்கை, கிங் கங்கை, நில்வள கங்கை மற்றும் ஜின் கங்கை ஆகியவற்றின்  நீர்மட்டம் அதிகரித்து வருவதாக வடிகால் அமைப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
வான் கதவுகள் திறப்பு
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக நீர் வெளியாகின்றன.
அத்தோடு லக்ஸபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் 2 அடி அளவில் திறந்துள்ளதாகவும் இதனால் இந்த இரண்டு நீர்தேக்கத்தில் நீர் வெளியாகின்றமையால் களனி ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments