facebook

சஜித் பிரேமதாஸ 2022 ல் ஜனாதிபதியாக கனவு காண்கிறார்

2015ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகி விடலாம் என்ற கனவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு நெருக்கமான தரப்பில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர் இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவார் என்று சஜித் பிரேமதாஸ எண்ணியுள்ளார்.
அவ்வாறு அவர் தோல்வி அடையும் பட்சத்தில், அவரை கட்சியில் இருந்தே நீக்குவதற்கான சூழ்ச்சிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பின்னர் தாம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகி, எதிர்வரும் 2022ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் போது போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments