facebook

2016ஆம் ஆண்டில் விஞ்ஞான பீடத்துக்கு புதிதாக 1500 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்

பாடசாலைகளில் தொழில்நுட்ப விஞ்ஞானத்தை கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கென 2016ஆம் ஆண்டில் 1500 மாணவர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படுவரென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
Future - 2014 தேசிய கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளவில். இன்று முற்பகல் 9.00மணிக்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டில் மூடப்பட்டிருந்த சுமார் 500 பாடசாலைகள் மஹிந்த சிந்தனை தேசிய வேலைத்திட்டங்கள் அடிப்படையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டன.

பாடசாலை செல்லும் மாணவர்களின் வயதெல்லையை 16வரை அதிகரித்தோம். விஞ்ஞான பிரிவு இன்மையால் கல்வி கற்காத பாடசாலைகளுக்கு விஞ்ஞான பிரிவுகளை ஏற்படுத்திக் கொடுத்தோம். சுதந்திரக் கல்விக்காக அதிக பணத்தை செலவிட்டது மஹிற்த ராஜபக்ஷ அரசாங்கமேயாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

'எவரையும் கைவிடோம்' ('No One Left Behind   ') என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சியானது, மாணவர்களுக்கு சிறந்த முறையில் உயர் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்கு அவ்வாறான உயர்கல்வி நிலையங்களை அறிமுகஞ்செய்து கொடுக்கும்.அவ்வாறே சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற விரும்பும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டும் நல்லதொரு வாய்ப்பாக அமையப்போகிறது.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கம் (NJOBA  ) இந்த இக்கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது. இக்கண்காட்சி எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை பொதுமக்கள் முற்றிலும் இலவசமாகவே பார்வையிடலாம்.

Post a Comment

0 Comments