facebook

2015ம் ஆண்டு முதல் 10 லட்சம் ரூபா செலுத்தி பட்டம் பெறலாம்

2015ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாவை செலவிட்டு இலங்கையில் கல்விப் பட்டங்களை பெற முடியும் என இளைஞர் விவகாரம் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்து வருடந்தோறும் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பட்டங்களை பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
சொந்தங்கள், உறவினர்கள் இல்லாத நாடுகளுக்கு சென்று 60 லட்சம் ரூபாவை செலவிட்டு பட்டத்தை பெறுவதை விட தாய் நாட்டில் 10 லட்சம் ரூபாவை செலுத்தி பட்டப்படிப்பை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைப்பது பெரும் நிவாரணமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments