facebook

நேபாள பஸ் விபத்தில் 17 பேர் மரணம்

நேபாளத்தில் பஸ் ஒன்று மலைச்சாலையில் இருந்து 100 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  04 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் (03)  இடம்பெற்ற இந்த விபத்தில் , 17 பேர் உயிரிழந்தனர் என்றும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று இந்திய செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

இந்த பஸ்ஸில் சுமார் 60 பயணிகள் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் நேபாள கோயில்களில் வழிபடச் சென்ற இவர்கள், அங்கிருந்து திரும்பிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் பியூதான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள லமச்சாவூர் என்ற கிராமத்தின் அருகே இந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, 100 மீட்டர் ஆழத்தில் சென்றுகொண்டிருந்த மடிகோலா என்ற ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் 9 பேர் சம்பவம் நடந்த இடத்திலும், ஏனையோர் வைத்தியசாலையிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments