facebook

சீரற்ற காலநிலை காரணமான உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு


சீரற்ற காலநிலை காரணமான உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவற்றில் 12 மரணங்கள் களுத்துறை மாவட்டத்திலும் மற்றைய மூன்றும் மாத்தளை மற்றும் கொழும்பிலும் பதிவாகியுள்ளன. 

மேலும் களுத்துறையில் உயிரிழந்தவர்களில் இரு சிறுமியர் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளனர். 

மாத்தளை மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதோடு, 35 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

Post a Comment

0 Comments