facebook

இந்தியாவில் மின்னல் தாக்கி 12 பேர் பலி

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் பல பகுதிகளை முன்கூட்டிய பருவமழை நேற்று பதம் பார்த்தது. 

பயங்கர இடி, மின்னலுடன் சில மாவட்டங்களில் 30 மில்லி மீட்டர் முதல் 50 மில்லி மீட்டர் வரையிலான மழை பொழிவினால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டது. 

மின்னல் தாக்கி முர்ஷிதாபாத் மாவட்டம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்த இருவரும், டல்டான்பூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரும், ரகுநாத் கஞ்ச் பகுதியின் ராஜாநகர் கிராமத்தை சேர்ந்த இருவரும் பலியாகினர். 

இதேபோல், புர்லியா மாவட்டத்தின் ஜல்டா, பாக்முண்டி, காசிபூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பலியாகினர். 

புர்த்வான் மாவட்டத்திலும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபரும், மழைக்கு ஒதுங்கிய கொட்டகை மீது மின்னல் தாக்கியதில் ஒரு பெண்ணும் பலியாகினர். 

மேற்கு மிட்னப்பூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை வாங்கி வந்துக் கொண்டிருந்த சகோதரிகள் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 

மேலும், பெண்கள் உள்பட 28 பேர் மின்னல் தாக்கி உடல் கருக்கிய நிலையில் வைத்தியசாலைகளில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments