facebook

கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிப்பு : Face book இற்கு நன்றி

Facebook ஊடாக சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் அதனை முடக்க வேண்டுமெனவும் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த கருத்திற்கு எதிர்மாறான நன்மை பயக்கும் விடயமொன்று கனடா கியூபெக் நகரில் இடம்பெற்றுள்ளது.
புதிதாக பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து கடத்திய பெண்ணை Facebook உதவியுடன் கனேடிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விக்டோரிய என்ற பெண், கடந்த திங்கட் கிழமை குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் பொறுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கமராவில் பதிவாகிய காட்சியிலிருந்து பெறப்பட்ட புகைப்படத்தை பொலிஸார்  Facebook தளத்தில் தரவேற்றி, குழந்தை காணாமல்போன தகவலையும் பதிவுசெய்தனர்.
இந்த தகவலை ஆயிரக்கணக்கான Facebook பாவனையாளர்கள் பகிர்ந்து கனேடிய பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.
இந்நிலையில் பேஸ்புக் பதிவுக்கு அமைய சந்தேகநபரான, குழந்தையை கடத்திய பெண்ணின் அயல்வீட்டினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கு அமைய பொலிஸார் பெண்ணை கைதுசெய்ததோடு குழந்தையையும் மீட்டுள்ளனர்.
குழந்தையை மீளப் பெற்றுக்கொண்ட பெற்றோர் கனேடிய பொலிஸார் மற்றும்  Facebook தளத்திற்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments