facebook

திருகோணமலை வளாகத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.தற்போது பல பௌதீக ரீதியிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண் மாணவர்களிற்கும், பெண் மாணவிகளிற்குமென இரு விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் 50 அறைகளைக்கொண்டதாகும். இதற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


உயர்கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 04 மாடிகளையும் 100 அறைகளையும் கொண்டதுமான பெண் மாணவிகளிற்கான இன்னுமொரு விடுதி 200 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாணவர் பொழுது போக்கு நிலையத்திற்காக 45.5 மில்லியன் ரூபாவும், ஆய்வு நிலையத்திற்காக 14 மில்லியன் ரூபாவும், விளையாட்டு மைதான அபிவிருத்திக்காக 50 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தொகுதி அமைப்பதற்காக 410 மில்லியன் ரூபாவும், தகவல் தொழிநுட்ப நிலையத்திற்காக 304.4 மில்லியன் ரூபாவும், வாசிகசாலை நிர்மாணிப்பதற்காக 326.2 மில்லியன் ரூபாவும், பொழுது போக்குகளுடன் கூடிய சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்காக 130.4 மில்லியன் ரூபாவும், சித்த மருத்துவ மற்றும் சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் நிர்மாணிப்பதற்காக 100 மில்லியன் ரூபாவும், இயற்தை தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக 14.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக திருமலை வளாகத்தின் முதல்வர் டொக்டர் என்.வர்ணகுலேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் தொடர்பாடல் மற்றும் வர்த்தக கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் ஆகிய பீடங்களும், சித்த மருத்துவ பிரிவையும் உள்ளடக்கிய சுமார் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்ககைகளை மேற்ண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments