facebook

வறியவர்களின் வாழ்வை மலரச் செய்த சமுர்த்தி திட்டம்

கிராமங்களில் வாழும் அப்பாவி வறிய மக்கள் சுயமாக செயற்பட சமுர்த்தி அதிகாரச்சபையே வழிகாட்டியது என தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
நுவரெலிய மாவட்டத்தின் ஹங்குரங்கெத்த பிரதேச சமுர்த்தி  பிரதான சங்க ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்- இன்று குடும்பங்களில் இன்று அந்த குடும்பங்கள் செழிப்பாக வாழ்வது எம்மனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இச்சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சமுர்த்தி அதிகாரிகளாகிய நீங்கள் எந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

வறிய குடும்பங்களில் இன்று காணப்படும் நிலையை கண்டு நீங்கள் பெறும் திருப்தியை பணத்துக்கு ஒப்பிட முடியாது.சமுர்த்தி அதிகாரிகள் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளாகின்றனர். ஆனாலும் அவற்றுக்கு மனந்தளராமல் பொருளாதாரத்தைப் பலப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்.அதனால் அரசாங்கம் சரியான இடத்தினை உங்களுக்கு வழங்கியுள்ளது.

சமுர்த்தி திட்டத்தை இந்த அரசாங்கமே உருவாக்கியது. அதனை பாதுகாக்கும் கடமையிலும் இந்த அரசே ஈடுபட்டுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments