facebook

உணவுக்காக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்தில் இல்லை

உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு விற்பனை செய்யும் தேங்காய் எண்ணெய் வகைகள் உரிய தரத்தில் காணப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விற்பனை நிலையங்களில் பெறப்பட்ட எண்ணெய் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட பெறுபேறுகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயாகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ் குறிப்பிட்டார்.
12 வகையான எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது  அவற்றில் எட்டு வகையான எண்ணெய் வகைகளில் வேறு பொருட்கள் கலக்கப்பட்டுள்ளமை அறியக்கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தரமான, நுகர்விற்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெங்கு அபிவிருத்தி சபையிடம் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments