facebook

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுயத்த மோடி : பொன்.இராதாகிருஷ்ணன்

இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உறுதிபூண்டுள்ளதாக இந்திய மத்திய அரசில் புதிதாக இணை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர், இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதிபூண்டுள்ளதால்,அது குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments