facebook

மண் இடிந்து விழுந்ததில் பதுளை பண்டாரவளை ரயில் சேவை பாதிப்பு


மத்திய மலைநாட்டுக்கான ரயில் சேவை பண்டாரவளை தொடக்கம் பதுளை வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெமோதர - உடுவரவிற்கு இடையிலான ரயில் பாதையில் மண்மேடு இடிந்து வீழ்ந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதென மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

இதனால் இன்று (28) அதிகாலை 5.45 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த உடரட்ட ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

காலை கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயில் பண்டாரவளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ரயிலில் இருந்த பயணிகளை பண்டரவளையில் இருந்து பஸ் மூலம் பதுளைக்கு அழைத்துச் சென்றதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments