facebook

பொதுபல சேனா இன்று பதுளையில் ஆர்பாட்டம்

பதுளையில் இன்று பொதுபல சேனா அமைப்பு ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்தில் பொதுச் செயலாளர் அப்துல் ராஸிக் அவர்களுக்கும் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடிய நிகாப்  ஆடைக்கும் எதிராகவே இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இன்று சுமார் பகல் 1 மணிக்கு பதுளை பஸ் நிலையத்தின் அருகில் ஆரம்பமான  இந்த ஆர்பாட்டம் மழை காரணமாக கைவிடபட்டு பின்னர் மாலை 4 மணியளவில் மறுபடியும் தொடங்கியுள்ளது.
இதன்போது, இங்கு செய்தி சேகரித்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவரின் கேமரா சேதப்படுத்தப் பட்டதாகவும் தெரிய வருகிறது.
சுமார் 25 பெளத்த பிக்குமாரும் 150 பொதுமக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments