facebook

விக்கினேஸ்வரன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றிருந்தால் புதிய பயணம் ஆரம்பமாகியிருக்கும் : வாசு

ஜனா­தி­ப­தியின் அழைப்பை வட மாகாண முத­ல­மைச்சர் ஏற்­றி­ருந்தால் அது இரு­த­ரப்­பி­ன­ருக்­கி­டையே புதி­ய­தொரு பய­ணத்­திற்­கான ஆரம்­ப­மாக அமைந்­தி­ருக்கும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். “சார்க்" வல­யத்தின் இந்­தி­யாவின் முத­லி­டத்தை தக்­க­வைத்­துக்­கொள்ளும் அர­சியல் காய் நகர்த்­தலை "மோடி" ஆரம்­பித்­து­விட்­டா­ரென்றும் அமைச்சர் தெரி­வித்தார். 
 
 
இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பானஅமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்;
 
இந்­தியப் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி பத­வி­யேற்கும் வைப­வத்தில் தன்­னோடு கலந்­து­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி மகிந்த ராஜபக் ஷ வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு விடுத்த அழைப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும். இந்த அழைப்பை முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கலாம். இதனால் வட­மா­கா­ணத்தின் பிரச்­சி­னைகள் அணைத்தும் தீர்க்­கப்­பட்­டு­விட்­ட­தாக நான் கூற முனை­ய­வில்லை.
 
அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண சபைக்­கு­மி­டையே புதி­ய­தொரு இணக்­கப்­பாட்­டிற்கு புதிய பய­ணத்­திற்கு இது வழி­வ­குத்­திடும். அத்­தோடு ஜனா­தி­ப­தி­யுடன் முத­ல­மைச்சர் இந்­தியா சென்றால் அது வடக்கில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்­லை­யென்ற தொழிற்­பாட்டை இந்­தி­யாவில் ஏற்­ப­டுத்தும் என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
 
முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தியின் அழைப்பை ஏற்­றுக்­கொள்­வ­தென்­பது மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண சபைக்கும் இடையே புதிய புரிந்­து­ணர்வு ஆரம்­ப­மாகும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும். மோடியின் பத­வி­யேற்பு வைப­வத்தில் சார்க் நாடு­களைச் சேர்ந்த தலை­வர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ள­மை­யா­னது சார்க் வல­யத்தில் இந்­தி­யாவின் முத­லி­டத்தை தக்­க­வைத்­துக்­கொள்ளும் அர­சியல் காய் நகர்த்­தல்­களை இந்த அழைப்பு விடுத்­ததன் மூலம் மோடி ஆரம்­பித்­துள்ளார்.
 
 
இது அமெ­ரிக்­காவின் நிகழ்ச்சி நிரல் அல்ல. மோடியின் இரா­ஜ­தந்­திர நிகழ்ச்சி நிர­லாகும். அத்­தோடு எதிர்­கா­லத்தில் இந்தியா சீனாவுடன் நல்லுறவை பேணி உறவுகள் பலப்படுத்தப்படுமானால், ஆசியாவின் வல்லரசுகளாக இரண்டு நாடுகளும் உருவெடுக்கும். அதன் பின்னர் வேறு எவரும் "வாலாட்ட" முடியாது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Post a Comment

0 Comments